கே.எல் ராகுல் ஓய்வு அறிப்பை வெளியிட்டாரா? வெளியான இணையதள பதிவு
23 ஆவணி 2024 வெள்ளி 10:18 | பார்வைகள் : 4761
இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுல் குறித்த செய்தி ஒன்று கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுல் இரண்டு தினங்களுக்கு முன்பு அவருடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதில், “விரைவில் நான் ஒரு அறிவிப்பை வெளியிடப்போகிறேன், அனைவரும் காத்திருங்கள்” என குறிப்பிடப்பட்டு இருந்தது.
K L Rahul, Cricket, Retirement
இதையடுத்து சமூக வலைதளத்தில் கே.எல் ராகுல் என்ன அறிவிப்பை சொல்லப் போகிறார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவல் ஏற்பட்டது.
இந்நிலையில் இணையதளத்தில் உலாவரும் சில விஷமிகள் கே.எல் ராகுல் வெளியிட்டது போன்ற அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர்.
அதில் கே.எல் ராகுல் தனது ஓய்வை அறிவிப்பது போன்ற வாசகங்கள் இடம்பெற்று இருந்ததை தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
இதையடுத்து, பலரும் அவரின் ஓய்வு அறிவிப்பு பதிவினை இணையத்தில் தேட ஆரம்பத்தினர், ஆனால் இறுதியில் கே.எல் ராகுல் ஓய்வு குறித்து எந்தவொரு பதிவும் வெளியிடவில்லை என்றும், இணையத்தில் பரவும் பதிவு முழுக்க முழுக்க போலியான செய்தி என்றும் தெரியவந்தது.
சில விஷமிகளின் இந்த செயல் கிரிக்கெட் ரசிகர்கள் பலரையும் கோபமடைய செய்துள்ளது.
அதே சமயம் கே.எல் ராகுல் அறிவிப்பதாக சொன்ன தகவல் எதையும் இதுவரை கே.எல் ராகுல் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
26 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan