Youtube சேனல் தொடங்கிய ரொனால்டோ
22 ஆவணி 2024 வியாழன் 09:59 | பார்வைகள் : 4739
பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய யூடியூப் சேனல் தொடங்கி சாதனை படைத்துள்ளார்.
போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) உலகளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் active ஆக இருக்கும் ரொனால்டோ, தற்போது புதிதாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார்.
அதற்கு "UR . Cristiano" என அவர் பெயரிட்டுள்ளார். அவரது சேனலை தற்போதுவரை 5.1 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.
ரொனால்டோ இந்த சேனலை தொடங்கிய முதல் 90 நிமிடங்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்கள் பதிவு செய்தனர்.
அவரது முதல் வீடியோவை வெளியிட்ட சில மணிநேரங்களில் 1.69 மில்லியன் சந்தாதாரர்கள் இணைந்தனர். இதன்மூலம் யூடியூப் உலகில் புதிய சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார்.
ரொனால்டோவிற்கு X தளத்தில் 112.5 மில்லியன் பின்தொடர்பாளர்களும், பேஸ்புக்கில் 170 மில்லியன் மற்றும் இன்ஸ்டாகிராமில் 636 மில்லியன் பின்தொடர்பாளர்களும் உள்ளனர்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan