23,000 யூரோக்களுக்கு சாம்பெயின் போத்தல்.. பரிஸ் மதுபான விடுதி மீது கோபமடைந்த அமெரிக்க வீராங்கனை!

21 ஆவணி 2024 புதன் 13:49 | பார்வைகள் : 13592
பரிசில் உள்ள மதுபான விடுதி ஒன்று தொடர்பான அமெரிக்க வீராங்கனை வெளியிட்ட காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் மூன்று பதக்கங்களை பெற்ற Simone Biles இந்த காணொளியை வெளியிட்டிருந்தார். அவர் பரிசில் உள்ள பெயர் குறிப்பிட விரும்பாத மதுபான விடுதி ஒன்றுக்கு சென்றிருந்ததாகவும், அங்கு சாம்பெயின் மதுபான போத்தல் ஒன்றின் விலையை கேட்டபோது அது, 26,000 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். யூரோவில் கிட்டத்தட்ட 23,300 யூரோக்கள் பெறுமதியுள்ள குறித்த சாம்பெயின் போத்தல் தொடர்பில் அவர் தனது காணொளியில், ‘மிகவும் விலை உயர்ந்த மதுபானம்.. அதனால் நான் வாங்கவில்லை’ என குறிப்பிட்டுள்ளார்.
26,000 அமெரிக்க டொலர்கள் விலையை கேட்டு தாம் அதிர்ச்சியடைந்ததாகவும் தெரிவித்தார். இந்த காணொளி தற்போது இணையத்தில் மிகவும் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.
பரிஸ் ஒலிம்பிக்கில் Simone Biles மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1