கடைசிப் போட்டியில் இலங்கை அபார வெற்றி!
21 ஆவணி 2024 புதன் 13:30 | பார்வைகள் : 8431
மகளிர் அயர்லாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெற்றது.
இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி Belfastயில் நடந்தது.
முதலில் துடுப்பாடிய அயர்லாந்து அணி 46.3 ஓவரில் 122 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக அர்லேனே கெல்லி 35 (75) ஓட்டங்கள் எடுத்தார்.
அச்சினி குலசூரியா, சமரி அதப்பத்து தலா 3 விக்கெட்டுகளும், சச்சினி நிசன்சலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய இலங்கை அணி 23.1 ஓவரிலேயே 123 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. அணித்தலைவர் சமரி அதப்பத்து (Chamari Athapaththu) 48 (49) ஓட்டங்களும், ஹர்ஷிதா சமரவிக்ரமா 48 (56) ஓட்டங்களும் எடுத்தனர்.
ஏற்கனவே தொடரை இழந்த இலங்கை அணிக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது. பிளேயர் ஆப் தி மேட்ச் விருதை இலங்கை அணித்தலைவர் அதப்பத்துவும், பிளேயர் ஆப் தி சீரிஸ் விருதை அர்லேனே கெல்லியும் பெற்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan