நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக வடிவேலு வழக்கு
21 ஆவணி 2024 புதன் 12:23 | பார்வைகள் : 7617
நடிகர் சிங்கமுத்துவிடம் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த மனு விசாரணையில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் வடிவேலுவுடன் பல திரைப்படங்களில் நடித்தவர் சிங்கமுத்து என்பதும் ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் இருவருக்கும் இடையே பிரச்சனை எழுந்ததால் சில ஆண்டுகளாக இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திடீரென சிங்கமுத்து மீது நடிகர் வடிவேலு 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு பதிவு செய்துள்ளார். அந்த மனுவில் ‘கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடித்து வருகிறேன். நானும் சிங்கமுத்துவும் பல படங்களில் ஒன்றாக நடித்துள்ளோம். நாங்கள் சேர்ந்து நடித்த படங்கள் நல்ல வெற்றி பெற்றன.
இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு என்னைப் பற்றி சிங்கமுத்து மோசமாக பேச தொடங்கினார். அதனால் அவர் இல்லாமல் நடிக்க தொடங்கினேன். இந்த நிலையில் சிங்கமுத்து எனக்கு ஒரு பிரச்சனைக்குரிய நிலத்தை வாங்கி கொடுத்தார். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் சிங்கமுத்து யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து என்னை பற்றி தரக்குறைவாக பேசி வருகிறார். இது எனக்கு மனவேதனையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் 5 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்க சிங்கமுத்துவுக்கு உத்தரவிட வேண்டும், என்னைப் பற்றி அவதூறாக பேசுவதற்கு சிங்கமுத்துவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இரண்டு வாரத்திற்குள் சிங்கமுத்து இந்த மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan