பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்த விஜய்.. காரணம் இதுவா?

20 ஆவணி 2024 செவ்வாய் 11:45 | பார்வைகள் : 6183
தளபதி விஜய் நடித்துள்ள ’கோட்’ திரைப்படத்தில் கேப்டன் விஜயகாந்த் ஒரு சின்ன கேரக்டரில் நடித்துள்ளதாகவும், ஏஐ டெக்னாலஜி மூலம் விஜயகாந்த் காட்சிகள் உருவாக்கப்பட்டு பிரேமலதாவிடம் அனுமதியும் பெற்று விட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் ’கோட்’ படத்தின் புரமோஷன் அடுத்தடுத்து வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் நேற்று திடீரென கேப்டன் விஜயகாந்த் வீட்டிற்கு தளபதி விஜய் சென்றார். அவருடன் இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர்களும் சென்று பிரேமலதா மற்றும் அவரது மகன்களை சந்தித்தனர்.
இந்த சந்திப்பின்போது பிரேமலதாவுக்கு விஜய் பூங்கொத்து கொடுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்ததாகவும் விஜயகாந்த் உருவப்படத்திற்கு மாலை மரியாதை செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளன. அதுமட்டுமின்றி விஜயகாந்த் மகன்களுடன் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படமும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த சந்திப்பின்போது ’கோட்’ படத்தில் விஜயகாந்த் காட்சிகள் குறித்து பிரேமலதாவிடம் ஆலோசனை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1