பிரபல இசையமைப்பாளர் கார் விபத்தில் மரணம்..

4 புரட்டாசி 2023 திங்கள் 09:16 | பார்வைகள் : 10255
தமிழ், மலையாள திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் தஷி என்ற சிவகுமார். இவர் ‘ஒத்த வீடு’ ’ஆடவர்’ ’சாதனை பயணம்’ போன்ற தமிழ் படங்களுக்கும் ஏராளமான மலையாள படங்களுக்கும் இசை அமைத்து உள்ளார்
இந்த நிலையில் இசையமைப்பாளர் தஷின் தனது நண்பர்களுடன் நேற்று கேரளாவில் இருந்து சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது திடீரென காரின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் மற்றும் தஷி ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அவரது நண்பர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
50 வயதான மறைந்த இசையமைப்பாளர் தஷி, ‘தந்தாரா’ என்ற மலையாள படத்திற்கு இசையமைப்பதற்கு சிறந்த இசையமைப்பாளர் என்ற கேரள மாநில விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் ஆயிரக்கணக்கான பக்தி ஆல்பங்களுக்கு இசையமைத்துள்ளார். மறைந்த தஷிக்கு தமிழ், மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1