ரஷ்யா மீது ஆளில்லா விமானத் தாக்குதல் ...
14 ஆடி 2024 ஞாயிறு 08:44 | பார்வைகள் : 9303
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது.
ஆளில்லா விமானம் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தியதில் எண்ணெய் கிடங்கில் தீப்பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலானது (2024.07.13) அதிகாலை ரஷ்யாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள ரோஸ்டோவ் மாகாணத்தில் உள்ள பகுதியில் இடம்பெற்றுள்ளது.
உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இதேபோல், உக்ரைனும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் ரஷ்யாவை தாக்கி வருகிறது.
இந்த தாக்குதலால் எண்ணெய் கிடங்கில் தீப்பிடித்தது. சுமார் 5 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. சுமார் 2100 சதுர அடி பரப்பளவில் தீ பரவியுள்ளது.
ஆனால் இந்த தீயினால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. மேலும் இரண்டு ஆளில்லா விமானங்கள் ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்பால் இடைமறித்து அழிக்கப்பட்டன.
இதற்கிடையில், உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்பு ரஷ்யாவின் ஐந்து ஆளில்லா விமானங்களில் நான்கை இடைமறித்து அழித்தது. உக்ரைன் வான்வெளியில் இருந்து பெலாரஸ் நோக்கி ஒரு விமானம் புறப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan