உடனே இந்த செயலியை நீக்கிவிடுங்கள்...இந்திய அரசு அதிரடி
10 ஆடி 2024 புதன் 10:38 | பார்வைகள் : 9900
ஒன்லைன் கடன் செயலி ஒன்று குறித்து அரசின் நிறுவனம் எச்சரிக்கை செய்துள்ளது.
ஒன்லைனில் கடன் வழங்கும் செயலிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஸ்மார்ட்போன் என்பது இன்று எல்லோரது கையிலும் உள்ள ஒன்றாக மாறிவிட்டது.
இதனால் நமது செல்போன் மூலமாகவே இருக்கும் இடத்தில் இருந்து கடன் வாங்கும் சூழல் தற்போது உள்ளது.
ஆனால், இணைய வசதிகள் வாயிலாக கடன் பெறுவது எளிதாக இருக்கும் பட்சத்தில், இதன்மூலம் வரும் பிரச்சனைகளும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் இந்திய அரசு நிறுவனம் ஒன்று கடன் வழங்கும் மொபைல் செயலி தொடர்பில் கவனமாக இருக்குமாறு எச்சரித்துள்ளது.
CashExpand-U Finance Assistant - Loan எனும் மொபைல் செயலில் Playstoreயில் இருந்து அகற்றப்பட்டது. இந்த செயலி உங்களது செல்போனில் இருந்தால் நீக்கி விடுங்கள் என்று அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் Cyber Dost என்ற நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து செயல்படும் இந்த செயலியானது, இந்நாட்டின் எதிரிகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று Cyber Dost குறிப்பிட்டுள்ளது.
எனினும், இந்த செயலி குறித்து அரசு எந்த சிறப்பு எச்சரிக்கையும் வெளியிடவில்லை.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan