Paristamil Navigation Paristamil advert login

வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி

வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி

31 ஆவணி 2023 வியாழன் 13:00 | பார்வைகள் : 10858


இஸ்ரேலிய யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில்  ஒருவரை பொத்துவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொத்துவில் சுற்றுலாப் பிரதேசத்திலுள்ள மசாஜ் நிலையம் ஒன்றுக்கு  மசாஜ் செய்வதற்காகச் சென்ற 23 வயதுடைய யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட குறித்த யுவதி  பொத்துவில் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், விசாரணைகள் நடத்தப்பட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக  பொலிஸ் அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.

வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மசாஜ் நிலையத்தில் சிகிச்சையாளராக கடமையாற்றி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்