இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி ஊர்வலம் - மும்பையில் கடலாய் திரண்ட ரசிகர்கள்
5 ஆடி 2024 வெள்ளி 09:04 | பார்வைகள் : 5380
T20 உலக கோப்பையுடன் இந்திய அணி சொந்த ஊர் திரும்பியுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று மும்பையில் வெற்றி ஊர்வலம் நடத்தி வருகின்றனர்.
ICC T20 உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி இன்று மும்பையில் வெற்றி பெருமை ஊர்வலத்தை நடத்தி வருகிறது.
மரைன் டிரைவ்-வின் நாரிமன் பாயிண்டிலிருந்து மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானம் வரை இந்த பெருமை ஊர்வலம் நடைபெற உள்ளது.
சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோவில், மகிழ்ச்சியில் திளைக்கும் ரசிகர்கள் மரைன் டிரைவை நிரப்பி இருப்பதைக் காணலாம்.
இந்திய அணியை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருப்பதால், பொது போக்குவரத்து கூட நிறுத்தப்பட்டுள்ளது.
ஊர்வலம் மாலை 5 மணி முதல் 7 மணி வரை நடைபெற உள்ளது.
நெரிசலைத் தவிர்க்க ரசிகர்கள் மாலை 4:30 மணிக்கு முன்பாக வந்து சாலை ஓரத்தில் கூடுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் மாலை 7 மணிக்கு இந்திய கிரிக்கெட் அணி வெற்றி அணிவகுப்பை நடத்துகின்றனர்.
இதனை பார்ப்பதற்காக ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் மும்பை வான்கடே மைதானத்தில் குவிந்து வருகின்றனர்.
ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் இந்த வெற்றி அணிவகுப்பை பார்ப்பதற்காக வான்கடே மைதானத்தில் கூடி இருக்கும் இந்த நிலையில், அங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan