லோகேஷ் கனகராஜுடன் இணையும் ராகவா லாரன்ஸ்!
2 புரட்டாசி 2023 சனி 05:56 | பார்வைகள் : 13533
பிரபல நடிகரான ராகவா லாரன்ஸ் பி வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகின்ற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
இதைத் தொடர்ந்து புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் கதாசிரியராக பணிபுரிந்த ரத்தினகுமார் இயக்க உள்ளார். ரத்தினகுமார் ஏற்கனவே மேயாத மான், குலுகுலு, ஆடை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் தனது அடுத்த படத்தை ராகவா லாரன்ஸ் நடிப்பில் இயக்க இருக்கிறார். இவர்களின் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கு லோகேஷ் கனகராஜ் கதை, திரைக்கதை எழுத உள்ளார் என்றும் லோகேஷ் கனகராஜ் தான் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் பிரீ ப்ரோடுக்ஷன் பணிகளும் தற்போது நடைபெற்று வருவதாக தெரியவந்துள்ளது. ராகவா லாரன்ஸ் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் இதனை உறுதி செய்துள்ளார். மேலும் அடுத்த மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
25 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan