நாளொரு நாடகம் நடத்தும் முதல்வர்: அண்ணாமலை குற்றச்சாட்டு
29 ஆடி 2024 திங்கள் 02:41 | பார்வைகள் : 5169
தமிழகத்தில் தினமும் கொலை நடப்பதால், சட்டம் - ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய, காவல்துறையை தன் கையில் வைத்திருக்கும் முதல்வரோ, நாளொரு அரசியல் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறிஉள்ளார்.
அவரது அறிக்கை:
சிவகங்கை மாவட்ட பா.ஜ., கூட்டுறவு பிரிவு மாவட்டச் செயலர் செல்வகுமார் சமூக விரோதிகளால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தமிழகம் கொலைகளின் தலைநகரம் ஆகிவிட்டது.
அரசு குறித்தோ, காவல்துறை குறித்தோ, சமூக விரோதிகளுக்கு எந்த பயமும் இல்லை.
சட்டம் - ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வரோ, நாளொரு அரசியல் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார். காவல்துறையை ஏவல் துறையாக்கி, ஒரு குடும்பத்தின் நலனுக்காக, ஒட்டுமொத்த மாநில மக்களும், உயிரை பணயம் வைத்திருக்கும் அவல நிலை, வரலாற்றி லேயே நிகழ்ந்ததில்லை.
சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற இயலாத கையாலாகாத்தனத்தை தொடரும் முதல்வர் ஸ்டாலின், தனக்கு முதல்வர் பொறுப்பில் நீடிக்கும் தார்மீக உரிமை இருக்கிறதா என, சுயபரிசோதனை செய்து கொள்ளட்டும்.
இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan