ரூ.59 க்கு 3 மாதம் Spotify பிரீமியம் - புதிய ஆஃபரை தவறவிடாதீர்கள்

24 ஆடி 2024 புதன் 09:08 | பார்வைகள் : 4714
இசை ஸ்ட்ரீமிங் தளமான Spotify வெறும் ரூ.59க்கு மூன்று மாதங்கள் இடையூறு இல்லாத இசையை வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
பிரபல இசை ஸ்ட்ரீமிங் தளமான Spotify, அதன் இலவச பயனர்களுக்கு ஒரு புதிய சலுகையை அறிவித்துள்ளது.
அதன்படி குறுகிய காலத்திற்கு, அதாவது மூன்று மாதங்களுக்கு விளம்பர மற்ற இசையை ரசிக்க, இப்போது பயனர்கள் வெறும் ரூ.59 செலுத்தி பிரீமியம் திட்டத்தை வாங்கலாம் என தெரிவித்துள்ளது.
இந்த சிறப்பு சலுகை புதிய பிரீமியம் சந்தாதாரர்களுக்கு மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் பிரீமியம் உறுப்பினராக இருந்தால், விளம்பர மற்ற இசைக்கு அப்பால் உங்களால் உலகளாவிய நன்மைகளை அனுபவிக்க முடியும், இதில் ஆஃப்லைன் பதிவிறக்கங்கள், வரம்பற்ற இசை மாற்றங்கள், உயர் தர ஒலி, தனிப்பயனாக்கப்பட்ட பிளேலிஸ்ட்கள்(playlists) மற்றும் உங்கள் இசை அனுபவத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் திறன் ஆகியவற்றை பெறலாம்.
இந்த சலுகை ஆகஸ்ட் 25 ஆம் திகதியுடன் முடிவடைகிறது, எனவே உங்கள் கேட்கும் அனுபவத்தை மேம்படுத்த இந்த அற்புதமான வாய்ப்பை தவறவிடாதீர்கள்.
மேலும் Spotify அதன் தற்போதைய பயனர்களுக்கும் சில இனிமையான சலுகைகளை வழங்குகிறது. டியோ, பேமிலி மற்றும் ஸ்டுடென்ட் திட்டங்கள் இரண்டு மாதங்களுக்கு தள்ளுபடி விலையில் வழங்கப்படுகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1