தளபதி - புரட்சி தளபதி மோதலா?
21 ஆடி 2024 ஞாயிறு 12:29 | பார்வைகள் : 6173
விஜய் நடித்துள்ள ‘கோட்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தேதியில் வேறு எந்த படமும் வெளியாக வாய்ப்பில்லை என்ற திரை உலக வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில் திடீரென விஷாலின் படம் அதே செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள ‘கோட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. மேலும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் அடுத்த மாதம் முதல் தொடங்க இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் இருக்கும் விஷாலின் ’மதகத ராஜா’ என்ற திரைப்படம் அதே செப்டம்பர் 5ஆம் தேதி தான் வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த படத்தை ரிலீஸ் செய்ய சமீபத்தில் விஷால் எடுத்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாகவும் இதனை அடுத்து இந்த படத்தின் இந்த படத்தை செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஐயா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விஷால் நடிப்பில், சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’மத கஜ ராஜா’ என்ற திரைப்படம் கடந்த 2012 ஆம் ஆண்டு தொடங்கி 2013 ஆம் ஆண்டு ரிலீசுக்கு தயாரானது. விஷால், அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம், நிதின் சத்யா, சடகோபன் ரமேஷ் உட்பட பலர் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan