வட மாகாணத்திற்கு ‘Good bye’ கூறிய வைத்தியர் அர்ச்சுனா!

18 ஆடி 2024 வியாழன் 15:30 | பார்வைகள் : 6287
பொது மக்கள் மற்றும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்த யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக பணியாற்றிய வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, வட மாகாணத்திற்கு “Good bye” என்றும் தெரிவித்துள்ளார்.
தனது பேஸ்புக் பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இனி அரசியல்வாதிகள் எவரையும் நம்பக்கூடாது என்பதை தெரிந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு நேற்று புதன்கிழமை பயணம் செய்திருந்த சுகாதார அமைச்சர், சாவகச்சேரி வைத்தியசாலையில் பதில் அத்தியட்சகர் தற்போது நியமனம் பெற்றுள்ளவரே என குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து, “இன்றிலிருந்து இந்த கறை படிந்த சிஸ்டத்தில் மெடிக்கல் அட்மினிஸ்ட்ரேட்டர் ஆக வேலை செய்ய மாட்டேன்” எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1