ஜப்பானில் 30 பாடசாலை மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி...!

12 ஆனி 2024 புதன் 08:26 | பார்வைகள் : 11200
ஜப்பானில் தற்செயலாக பெப்பர் ஸ்பிரே பயன்படுத்தப்பட்டதால் 30 மாணவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
டோக்கியோ நகரில் கொரிய பாடசாலை ஒன்றில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
பாடசாலை வகுப்பறையில் இருந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது பெப்பர் ஸ்பிரே தெளிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடும் பாதிப்புக்குள்ளான மாணவர்கள் கண் வலியால் அலறியுள்ளனர். உடனே பாடசாலைக்கு ஒரு டஜன் ஆம்புலன்ஸ்கள் மற்றும் பொலிஸ் கார்கள் அனுப்பப்பட்டன.
பின்னர் மாணவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அவர்களுக்கு கண்வலி அறிகுறிகள் சிறியதாக இருப்பதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் பொலிசாரின் கூற்றுப்படி, ஒரு ஜூனியர் உயர்நிலைப் பாடசாலை மாணவர் தற்செயலாக, ஒரு இடைவேளையின்போது நண்பருக்கு சொந்தமான பெப்பர் ஸ்பிரேயைப் பயன்படுத்தியுள்ளார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1