'விடாமுயற்சி' வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சுபாஷ்கரன்..!
26 ஆவணி 2023 சனி 08:57 | பார்வைகள் : 8742
’விடாமுயற்சி’ படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. ஆனால் இந்த படத்தின் மற்ற தகவல்கள் அதன்பின் வெளியாகவில்லை என்பதால் சில வதந்திகளும் வெளியானது.
’விடாமுயற்சி’ படத்தை தயாரிக்கும் முடிவிலிருந்து லைகா நிறுவனம் பின்வாங்கி விட்டதாகவும் வேறு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. அதைவிட இன்னொரு வதந்தி ’விடாமுயற்சி’ படமே டிராப் என்றும் கூறப்பட்டது. இதனால் அஜித் ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர்
இந்த நிலையில் நேற்று ராகவா லாரன்ஸ் நடிப்பில், பி வாசு இயக்கத்தில், லைகா தயாரிப்பில் உருவான ’சந்திரமுகி 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் லைகா நிறுவனத்தின் சேர்மன் சுபாஷ்கரன் கலந்து கொண்டார். அப்போது அவர் ’விடாமுயற்சி’ படம் என்பது எங்களுடைய பெருமைக்குரிய படம் என்றும் அந்த படத்தை டிராப் செய்யும் பேச்சுக்கு இடமில்லை என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.
அவரது இந்த பேச்சு ’விடாமுயற்சி’ படத்தின் அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்தது என்பதும் இதனை அடுத்து அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
23 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan