ஐஸ்வர்யா அர்ஜூனை கரம் பிடித்தார் உமாபதி ராமையா
10 ஆனி 2024 திங்கள் 11:58 | பார்வைகள் : 8815
நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா. இவரும் நடிகர் தான். ‛அதாகப்பட்டது மகாஜனங்களே, மணியார் குடும்பம், திருமணம்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் நடிகர் அர்ஜூனின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கும் காதல் மலர, சில மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது.
திருமண ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக திருமணம் தொடர்பான சடங்குகள் நடந்தன. இந்நிலையில் இன்று(ஜூன் 9) காலை சென்னையை அடுத்த கெருகம்பாக்கத்தில் உள்ள அர்ஜூனுக்கு சொந்தமான ஆஞ்சநேயர் கோயிலில் உமாபதி - ஐஸ்வர்யாவின் திருமணம் கோலாகலமாக நடந்தது. இதில் இருவீட்டாரது நெருங்கிய குடும்ப உறவுகள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நடிகர்கள் விஷால், செந்தில் உள்ளிட்ட ஒரு சில திரைப்பிரபலங்களும் இந்த திருமணத்தில் பங்கேற்றனர்.
திருமண வரவேற்பு ஜூன் 14ல் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பிரமாண்டமாய் நடைபெற உள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan