பிரதமர் மோடிக்கு கடிவாளம் போடப்பட்டுள்ளது - ஜெயக்குமார் பேட்டி
10 ஆனி 2024 திங்கள் 05:00 | பார்வைகள் : 6444
திருத்தணியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பா.ஜனதா மதவாதம் சாதி அரசியலை கைவிட வேண்டும். இந்த அரசியலால் தான் வடமாநிலங்களில் மக்கள் பா.ஜனதாவுக்கு சரியான பாடம் புகட்டியுள்ளனர். தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பு பா.ஜனதா தனித்து 400 இடங்கள் வெற்றி பெறுவோம் என மார்தண்டிக் கொண்டிருந்தனர். தற்போது 240 இடங்களை மட்டுமே பெற்றுள்ளனர்.
பிரதமர் மோடிக்கு தற்போது கடிவாளம் போடப்பட்டுள்ளது. அவர் தன்னிச்சையாக செயல்பட முடியாது. தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின், ஆட்சிக்கு வந்தவுடன் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என வாக்குறுதி கொடுத்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் 6600 பேருக்கு மட்டுமே அரசு பணி வழங்குவதற்கு தற்போது தேர்வு நடத்தப்பட்டது. அ.தி.மு.க., 52 ஆண்டுகளாக இயங்கி வரும் பெரிய கட்சி. இதை அழிக்க யாரும் முடியாது. வரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., ஆட்சி பிடிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
26 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan