Clamart : விபத்தை ஏற்படுத்திய சிறுவன், ஒருவர் பலி..!

4 ஆனி 2024 செவ்வாய் 15:53 | பார்வைகள் : 11370
14 வயதுடைய சிறுவன் விபத்தை ஏற்படுத்தியதில், 34 வயதுடைய சாரதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
Hauts-de-Seine மாவட்டத்தின் Clamart () நகரில் இச்சம்பவம் ஜூன் 3, செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. Peugeot 3008 எனும் மகிழுந்தை செலுத்திய 14 வயதுடைய சிறுவன், காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி வேகமாக பயணித்துள்ளான். பின்னர் மகிழுந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியில் பயணித்த மற்றொரு மகிழுந்துடன் மோதியது.
இச்சம்பவத்தில் குறித்த மகிழுந்தில் பயணித்த சாரதி கொல்லப்பட்டார்.
சிறுவன் செலுத்திய Peugeot 3008 மகிழுந்து திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவன் கைது செய்யப்பட்டு, விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1