மீண்டும் மருத்துவமனை சென்ற சோனாக்ஷி சின்ஹா
1 ஆடி 2024 திங்கள் 07:34 | பார்வைகள் : 5345
நடிகை சோனாக்ஷி சின்ஹாகாவுக்கு சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் அவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு சென்றதாக தகவல் வெளியானது. இதனை அடுத்து சோனாக்ஷி சின்ஹா கர்ப்பமாக இருப்பதாகவும் அது குறித்த பரிசோதனைக்கு சென்றதாகவும் வதந்திகள் பரவிய நிலையில் அந்த வதந்திக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் நடிகை சோனாக்ஷி சின்ஹா மருத்துவமனை சென்ற நிலையில் இது குறித்து தகவல் தெரிந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
சோனாக்ஷி சின்ஹா தந்தையும் பாலிவுட் மூத்த நடிகருமான சத்ருஹன் சின்ஹாவுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து தனது தந்தையின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காகத்தான் சோனாக்ஷி சின்ஹா மருத்துவமனை சென்றதாக தெரிகிறது.
இந்த நிலையில் சத்ருஹன் சின்ஹா மகன் தனது தந்தை உடல்நலம் குறித்து கூறிய போது அவருக்கு லேசான காய்ச்சல் மட்டுமே இருக்கிறது என்றும் அல்லது நாளை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார் என்றும் கவலைப்படும்படி எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய நண்பர் தான் சத்ருஹன் சின்ஹா என்ற நிலையில் சத்ருவும் சின்ஹா உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்து அவர் அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan