இலங்கையில் கடலில் மிதந்துவந்த போத்தலில் இருந்த திரவத்தை அருந்திய நால்வர் பலி
29 ஆனி 2024 சனி 15:54 | பார்வைகள் : 6672
கடலில் மிதந்துவந்த போத்தலில் இருந்த திரவத்தை அருந்திய தங்காலை பகுதியை சேர்ந்த நான்கு கடற்தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள நிலையில் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் , வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து படகில் கடற்தொழிலுக்கு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு சென்ற 06 கடற்தொழிலாளர்கள் கடற்பரப்பில் கண்டெடுத்த திரவத்தை அருந்திய நிலையில், மூவர் படகில் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கரையில் உள்ளவர்களுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , கடற்படையினர் மற்றும் சக கடற்தொழிலாளர்கள் கடலுக்குள் சென்று மீனவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்ததுடன் படகினையும் கரை சேர்ந்தனர்
மூவர் கடலிலையே உயிரிழந்த நிலையில் , மூவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஏனைய இருவரும் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan