விஜய் சினிமாவை விட்டு விலக காரணம் என்ன தெரியுமா?
29 ஆனி 2024 சனி 12:09 | பார்வைகள் : 8540
நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் முழுவீச்சில் நடித்து வருகிறார்.
படத்தின் பாடல்கள் மற்றும் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் வரவேற்பை பெற்றது. படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளறியுள்ளது.
சென்னை, கேரளா, மாஸ்க்கோ ஆகிய நகரங்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் வேகமெடுத்து வருகிறது. செப்டமபர் 5 ஆம் தேதி கோட் படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சினிமாவில் கலக்கி வந்த விஜய் தற்போது அரசியலில் மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார். தவெக கட்சியை தொடங்கி அதன் தலைவராக இருந்து வருகிறார் விஜய்.
மேலும் தளபதி 69 படத்துடன் சினிமாவை விட்டு ஒட்டுமொத்தமாக விலகவிருக்கும் விஜய், அதன் பின் முழுநேரம் மக்கள் பணியில் ஈடுபடவுள்ளார்.
2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு செயல்படும் விஜயின் தவெக கட்சி பல்வேறு நலத்திட்ட பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
விஜயின் அரசியல் பிரவேசம் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தாலும் இனிமேல் அவர் படங்களில் நடிக்கமாட்டார் என்பது ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலருக்கும் வருத்தத்தை அளித்துள்ளது என்று தான் கூறவேண்டும்.
இதுகுறித்து விஜயின் நெருங்கிய நபர் சஞ்சீவிடம் கேள்விகேட்டப்பட்டது, அதற்கு பதிலளித்த அவர் கூறுகையில், “அதை பற்றிய நானே விஜயிடம் நேரடியாக கேட்டேன், அதற்கு பதிலளித்த விஜய், “கேள்விபட்டியா.. அப்போ அதுதான் உண்மை என்று ஒருவரியில் கூறிவிட்டார்” என்றார்
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan