பல் மருத்துவர்களுக்கு உதவும் இரண்டு வயது செல்லப் பிராணி golden Dog.

29 ஆனி 2024 சனி 07:48 | பார்வைகள் : 7332
பல் மருந்துவர்களை சந்திக்க சிறுவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் அன்றி ஏன் சாதாரண மக்களும் பயப்படுவது உண்டு. பல் மருத்துவர்களுடைய அறைகளிலே காணப்படுகின்ற படுக்கை, கையாளப்படுகின்ற கருவிகள், போன்றவையே குறித்த தயக்கத்திற்கு காரணம்.
எனவே பிரான்சில் Brest பகுதியில் உள்ள Finistère நகரில் ’hôpital de la ville' நகர மருத்துவமனை ஒரு புதிய திட்டத்தை கையாளுகிறது. நோயாளர்களின் எண்ணங்களை திசை திருப்பம், பல் மருத்துவ சிகிச்சையின் போது அவர்களுடைய தயக்கத்தை வேறு திசைக்கு திருப்ப 'Golden Dog' எனும் இரண்டு வயது நாய் ஒன்றினை பயன்படுத்துகிறார்கள்.
மருத்துவ சிகிச்சையின் போது நோயாளர்கள் குறித்த நாயுடன் வருடுதல், விளையாடுதல் என தமது எண்ணங்களை வேறொரு திசையில் வைத்திருக்கும் போது சுலபமாக பல் மருத்துவர்கள் தம் சிகிச்சையை மேற்கொள்கிறார்கள் என தெரிவிக்கப்படுகிறது, 'Golden Dog' அனைவருடனும் இதமாக பழகுவதற்கு ஏற்றவாறு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் மருத்துவர்கள், நோயாளர்கள் அனைவருடன் இதமாக பழகும் golden Dogக்கு சில தடைகளும் உண்டு. மருத்துவமனையின் எல்லா பகுதிகளுக்கும் செல்வதற்கு golden Dog அனுமதிக்கப்படுவதில்லை அதனையும் நன்கு புரிந்து கொண்டே மருத்துவர்களுக்கு உதவியாக பணியாற்றுகிறது என தெரிவிக்கிறார்கள்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1