சிம்புக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
29 ஆவணி 2023 செவ்வாய் 14:46 | பார்வைகள் : 9655
சிம்பு நடிப்பில் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் ’கொரோனா குமார்’ என்ற படம் உருவாக இருந்தது. இந்த படத்திற்காக நடிகர் சிம்புவுக்கு வேல்ஸ் நிறுவனம் ரூபாய் 4.50 கோடி ரூபாய் அளித்திருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் சிம்பு நடிக்காததை அடுத்து வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக விசாரணையில் இருந்த நிலையில் தற்போது சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
வேல்ஸ் பட நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ரூபாய் ஒரு கோடி உத்திரவாதத்தை நடிகர் சிம்பு செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan