இலங்கை அரசியல்வாதிகளுக்கு ஜனாதிபதி விடுத்த உத்தரவு!

29 ஆவணி 2023 செவ்வாய் 06:26 | பார்வைகள் : 12624
இலங்கையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5, 6, 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு விசேட அறிவித்தல் விடுத்துள்ளார்.
சுகாதார அமைச்சர் தி கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையிலேயே ஜனாதிபதி மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளார்.
கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதிப்பதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் அவகாசம் தேவை என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தில் கோரியதுடன் அதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1