மன்னாரில் நாய்கள் காகங்கள் மர்மமான முறையில் மரணம்
22 ஆனி 2024 சனி 14:00 | பார்வைகள் : 16867
மன்னார் உப்புக்குளம் நளவன் வாடி பகுதியில் வீட்டு வளர்ப்பு நாய்கள் காகங்கள் தொடர்ச்சியாக மர்மமான முறையில் உயிரிழந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவமானது கடந்த சில தினங்களாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்த அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில்,
மிகவும் ஆரோக்கியமாக அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட்டு கிரமமான முறையில் பராமரிக்கப்பட்டு வந்த நாய்கள் திடீரென இறப்பது தங்களுக்கு வேதனையளிகிறது.
குறித்த நாய்கள் வீட்டில் இருந்து வெளியில் சென்ற நிலையிலே குறித்த சம்பவம் இடம்பெற்று வருகின்றது.
இதுவரை 8 நாய்கள் இவ்வாறு உயிரிழந்த நிலையில் மேலும் மூன்று நாய்களின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது.
நாய்களுக்கு அப்பகுதியில் யாரோ நஞ்சு கலந்த உணவை வழங்கியிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.
நாய்கள் மாத்திரமன்றி காகங்கள் மற்றும் கோழிகளும் உயிரிழந்துள்ளது.
இச் சம்பவம் குறித்து உரிய அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரியுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan