ஹஜ் புனித யாத்திரைக்கு சென்றவர்களின் அவல நிலை - அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

20 ஆனி 2024 வியாழன் 10:17 | பார்வைகள் : 12153
சவுதி அரேபியாவின் மெக்காவில் கடுமையான வெப்ப அலையால் ஹஜ் புனித யாத்திரை சென்றவர்களில் 550 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இஸ்லாமிய மதத்தினர் சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா மதினாவுக்கு ஹஜ் புனித யாத்திரை செல்வதை தங்கள் முக்கிய மதக்கடமைகளில் ஒன்றாக கருதுகின்றனர்.
இதன்படி, ஆண்டுதோறும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து மெக்கா மதினாவுக்கு இஸ்லாமிய மதத்தினர் புனிதப்பயணம் மேற்கொள்கின்றனர்.
சவுதி அரேபியாவின் மெக்காவில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது.
வெப்பம் காரணமாக ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ள யாத்ரீகர்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தாண்டு (2024) மெக்கா மதினாவுக்கு புனிதப்பயணம் மேற்கொண்ட யாத்ரீகர்களில் 550 பேர் வெப்ப அலை காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடுமையான வெப்பம் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு 550 யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 323 பேர் எகிப்து நாட்டை சேர்ந்த யாத்ரீகர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1