பிரித்தானியாவில் Sandwich சாப்பிட்ட 200க்கும் அதிகமானோர் பாதிப்பு
19 ஆனி 2024 புதன் 08:50 | பார்வைகள் : 12150
பிரித்தானியாவில், பல்பொருள் அங்காடிகள் 60க்கும் மேற்பட்ட சாண்ட்விச் முதலான உணவுப்பொருட்களை திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது.
அந்த சாண்ட்விச்களில் ஈ கோலை என்னும் கிருமியின் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவை திரும்பப் பெறப்பட்டன.
அந்த ஈ கோலை கிருமியின் பாதிப்பு எப்படி ஏற்பட்டது என்பது தெரியவந்துள்ளதாக உணவு தரநிலை ஏஜன்சி தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில், இம்மாதம், அதாவது, ஜூன் மாதம் 11ஆம் திகதி நிலவரப்படி,
சாண்ட்விச் வகை உணவுகளை சாப்பிட்ட 211 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
அவர்களில் 67 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டது.
சாண்ட்விச்களில் பயன்படுத்தப்பட்ட லெட்டூஸ் இலைகள் (lettuce leaves), ஈ கோலை கிருமியின் தாக்கத்துக்குக் காரணமாக அமைந்திருக்ககூடும் என உணவு தரநிலை ஏஜன்சி (The Food Standards Agency - FSA) தெரிவித்துள்ளது.
ஆடு மாடுகளின் சாணம் செடிகளுக்கு உரமாக பயன்படுத்தப்படுவதாலோ, அல்லது சாணத்திலிருந்து தண்ணீர் அல்லது மண்ணில் கிருமி பரவி, அந்த தண்ணீர் அல்லது மண்ணிலிருந்தும் லெட்டூஸ் இலைகளுக்கு இந்த ஈ கோலை கிருமிகள் பரவியிருக்கலாம் என்றும் கருதப்படுவதாக Harper Adams பல்கலையில், பயிர் அறிவியல் துறை பேராசிரியராக பணியாற்றும் Jim Monaghan என்பவர் கூறுகிறார்.
தற்போது, சாண்ட்விச்களில் பயன்படுத்தப்பட்ட லெட்டூஸ் இலைகளிலிருந்துதான் இந்த ஈ கோலை கிருமி பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என கருதப்பட்டாலும், அதைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாகும். ஏனென்றால், சாண்ட்விச்கள் தயாரானதுமே அவை விற்கப்பட்டுவிடுகின்றன.
மக்கள் அவற்றை உண்டுவிடுகிறார்கள். ஆக, அந்த சாண்ட்விச்சிலிருந்த லெட்டூஸ் இலைகளிலிருந்துதான் கிருமி பரவியது என்பதை உறுதி செய்வது கடினம்தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan