இலங்கையில் திருமண நிகழ்வொன்றில் நடனமாடிய யுவதி மரணம்
28 ஆவணி 2023 திங்கள் 02:24 | பார்வைகள் : 13452
திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த யுவதியொருவர் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
மீகொட பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.
இந்த யுவதி தான் பணிபுரியும் நிறுவனத்தின் ஹொரணை பிரதேசத்தில் உள்ள விழா மண்டபமொன்றில் இடம்பெற்ற திருமண வைபவத்தில் கலந்து கொண்ட போது திடீரென சுகவீனமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்கு இந்த யுவதியை காரில் ஹொரணையில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அவரை ஹொரண வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறு வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த யுவதி ஹொரண வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அதற்குள் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan