பலவீனமான கூட்டணி அரசு உயிர் வாழ போராடும்: ராகுல் சாடல்
18 ஆனி 2024 செவ்வாய் 10:08 | பார்வைகள் : 7921
பிரதமர் மோடி தலைமையிலான பலவீனமான கூட்டணி அரசு உயிர் வாழ போராடும் என காங்கிரஸ் எம்.பி ராகுல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, பைனான்சியல் டைம்ஸ் ஆங்கில இதழுக்கு ராகுல் அளித்த பேட்டி: மோடி தலைமையிலான அரசு எளிதாக உடையக்கூடியது. சிறிய இடையூறு ஏற்பட்டால் கூட அரசு கவிழ்ந்துவிடும். பிரதமர் மோடி தலைமையிலான பலவீனமான கூட்டணி அரசு உயிர்வாழ போராடும்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான அடக்குமுறைகள் நிகழாமல் நியாயமான முறையில் தேர்தல் நடந்திருந்தால், இண்டியா கூட்டணி எந்த சந்தேகமும் இன்றி பெரும்பான்மையை வென்றிருக்கும்.
ஆபத்து
அங்கு அதிருப்தியில் உள்ளவர்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். சிறிய குழப்பம் ஏற்பட்டால் கூட மத்தியில் உள்ள தே.ஜ., கூட்டணி அரசுக்கு ஆபத்து. வெறுப்பையும், கோபத்தையும் பரப்பி, அதன் மூலம் பலனைப் பெறலாம் என பா.ஜ., நினைத்தது. லோக்சபா தேர்தலில் வெற்றி பெற பா.ஜ., பயன்படுத்திய மதம் மற்றும் வெறுப்பு அரசியலை மக்கள் நிராகரித்து விட்டனர். இவ்வாறு ராகுல் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan