Sevran : பொருளாதார அமைச்சக சாரதியின் மகிழுந்து ஆவணங்களுடன் திருட்டு...!
18 ஆனி 2024 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 9716
பொருளாதார அமைச்சகத்தில் பணிபுரியும் சாரதி ஒருவரிடம் இருந்து மகிழுந்து ஒன்றும், சில பெறுமதியான ஆவணங்களும் திருடப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் எலிசே மாளிகைக்குள் நுழைவதற்கு பயன்படுத்தப்படும் 'நுழைவு அட்டை' (cartes d'accès) இரண்டு திருடப்பட்டுள்ளன. பொருளாதார அமைச்சகத்தில் பணிபுரியும் குறித்த சாரதி தனது Sevran (Seine-Saint-Denis) நகரில் உள்ள வீட்டில் நிறுத்தி வைத்திருந்த மகிழுந்து திருடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியில் இருந்து 8 மணிக்குள்ளாக அது திருடப்பட்டுள்ளது.
சமிக்ஞை பொருத்தப்பட்ட Peugeot 3008 மகிழுந்தே திருடப்பட்டதாகவும், அதற்குள் மேற்குறித்த நுழைவு அட்டைகள் இரண்டு இருந்ததாகவும், அவையும் திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sevran நகர காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan