Paristamil Navigation Paristamil advert login

ஐரோப்பிய நாட்டில் இலங்கையர் மீது கத்திக்குத்து 

ஐரோப்பிய நாட்டில் இலங்கையர் மீது கத்திக்குத்து 

17 ஆனி 2024 திங்கள் 15:02 | பார்வைகள் : 16160


இத்தாலியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 41 வயதுடைய இலங்கையர் ஒருவர் அதே நாட்டவரை பலமுறை கத்தியால் குத்தி பலத்த காயங்களை ஏற்படுத்தியதன் பின்னர் கொலை முயற்சிக்காக இத்தாலியின்  கராபினியேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட 44 வயதான இலங்கையர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது கழுத்து, மார்பு மற்றும் வலது தொடையில் பலத்த காயங்கள் உள்ளாகியுள்ளது.

படுகாயங்களுடன் பெல்லெக்ரினி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளார்.

கத்தியால் குத்தியவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இவர் சட்டவிரோதமாக இத்தாலியில் தங்கியுள்ளார். அத்துடன் அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமந்தப்பட்டுள்ளது.

சந்தேக நபர் Neapolitan நீதித்துறை அதிகாரத்தின் கீழ் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கண்காணிப்பு காட்சிகளை பகுப்பாய்வு செய்வது மற்றும் நேரடி சாட்சியங்களைச் சேகரிக்கும் விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்