பாகிஸ்தானில் 12 வயது சிறுமி திருமணம் செய்த 72 வயதுடைய மூதாட்டி
17 ஆனி 2024 திங்கள் 12:26 | பார்வைகள் : 7603
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பெசாவரில் பொலிஸார் 12 வயது சிறுமியை திருமணம் செய்ய முயன்ற 72 வயது முதியவரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த திருமணம் நடப்பதற்குள் அதிகாரிகள் தலையிட்டு, 72 வயதானவரை கைது செய்துள்ள நிலையில் சிறுமியின் தந்தை சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விசாரணைகளின்போது சிறுமியின் தந்தை, தனது மகளை 72 வயது மணமகனுக்கு 500,000 பாகிஸ்தான் ரூபாய்க்கு விற்பனை செய்தமை தெரியவந்துள்ளது.
உலகிலேயே அதிகமாக சிறுவர் திருமணங்களின் நடைபெறும் நாடுகளில் பாகிஸ்தானில் ஒன்றாகும்.
ஐக்கிய நாடுகள் சிறுவர் அமையத்தின் தகவல்படி, பாகிஸ்தானில் 18.9 மில்லியன் சிறுமிகள் 18 வயதை அடையும் முன்பே திருமணம் செய்து கொள்கிறார்கள்.
மேலும், 4.6 மில்லியன் சிறுமிகள் 16 வயதை எட்டுவதற்கு முன்பே திருமணம் செய்து கொள்கிறார்கள் எனவும் குறிப்பிடப்படுகிறது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan