கூட்டணிக்கு மறுப்பு... 330 தொகுதிகளில்தனித்து களமிறங்கியுள்ள Éric Zemmour கட்சி..!!
17 ஆனி 2024 திங்கள் 10:32 | பார்வைகள் : 17707
தீவிர வலதுசாரியான Éric Zemmour, தமது கட்சி 330 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் என அறிவித்துள்ளார்.
பிரான்சில் உள்ள 577 தொகுதிகளில் அவரது Reconquête கட்சி வெறுமனே 330 தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவதாக நேற்று ஜூன் 16 ஆம் திகதி மாலை அறிவித்தார். இந்த தேர்தலில் இடதுசாரிகள் இணைந்து கூட்டணி அமைத்தது போல், வலதுசாரி கட்சியான Rassemblement national கட்சியுடன் கூட்டணி வைக்க Éric Zemmour விரும்பினார். ஆனால் இந்த கூட்டணி ஒன்றிணையவில்லை. கூட்டணி சேர Rassemblement national கட்சி மறுத்துள்ளது.
அதையடுத்தே, 330 தொகுதிகளில் அவரது கட்சி தனித்து போட்டியிடுவதாக Éric Zemmour அறிவித்துள்ளார்.
”நாங்கள் உண்மையான தேசிய ஒன்றியமாக வலதுசாரிகள் நிறைந்த கூட்டமைப்பாக பிரச்சாரம் மேற்கொள்ள விரும்பினோம். ஆனால் இந்த முன்மொழிவை Rassemblement national பலமுறை மறுத்துவிட்டது.” எனவும் அவர் தெரிவித்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan