விஜயின் ‘தி கோட்’ ரிலீஸ் தேதி மாற்றப்படுகிறதா?
15 ஆனி 2024 சனி 11:12 | பார்வைகள் : 5739
நடிகர் விஜய் தற்போது தனது 68 வது படமான தி கோட் (THE GREATEST OF ALL TIME) படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இதில் விஜய் தவிர மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ரஷ்யா, திருவனந்தபுரம் சென்னை, இலங்கை போன்ற பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் இந்த படத்தில் விஎஃப்எக்ஸ் (VFX) பணிகள் நிறைவடைந்து பிரீ ப்ரோடக்ஷன் பணிகளும் ஆரம்பித்துவிட்டன.
இதற்கிடையில் இந்த படமானது செப்டம்பர் 5 இல் உலகம் முழுவதும் வெளியாகும் என்று பட குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால் தற்போது கிடைத்த தகவல் ஒன்று ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதாவது இந்த படத்தில் நடிக்கும் அனைவரும் டி ஏ ஜிங் தொழில்நுட்பத்தின் மூலம் இளமையாக காட்டப்பட உள்ளனர்.
அதன்படி தற்போது டிஏஜிங் பணிகளும் நடைபெற்று வரும் நிலையில் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் அப்பணிகளை முடித்துவிட பட குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக அப்பணிகள் கூடுதலாக ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. ஆதலால் செப்டம்பர் 5 ஆம் தேதி படம் திரையிடப்படுமா? என்பதை டிஏஜிங் தொழில்நுட்ப கலைஞர்கள் சொல்லும் பதிலில் தான் இருக்கிறது என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் விஜய் ரசிகர்களை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan