சுவிட்சர்லாந்தில் பாரிய வெடிவிபத்து...! 2 பேர் பலி, பலர் காயம்
14 ஆனி 2024 வெள்ளி 08:49 | பார்வைகள் : 9309
சுவிட்சர்லாந்தின் நரமொன்றில் நிகழ்ந்த பாரிய வெடிவிபத்தொன்றில் சிக்கி இரண்டு பேர் பலியானார்கள்.
சுவிட்சர்லாந்தின் Aargau மாகாணத்திலுள்ள Nussbaumen நகரில், மாலை 7.00 மணியளவில், கட்டிடமொன்றின் தரைத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடத்தில் வெடிவிபத்தொன்று ஏற்பட்டது.
அந்த விபத்தில் இரண்டு பேர் பலியானார்கள், 11 பேர் காயமடைந்துள்ளார்கள்.
வேறு யாரேனும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளார்களா என்பதை அறிய தேடும் பணி தொடர்கிறது.
வெடிவிபத்தைத் தொடர்ந்து, அந்தக் கட்டிடத்தின் பல குடியிருப்புகளுக்கும் தீ பரவ ஆரம்பித்தவுடன், அங்கு வசித்துவந்தவர்களை அவசரமாக வெளியேற்றவேண்டிய நிலை ஏற்பட்டது.
எதனால் இந்த வெடிவிபத்து ஏற்பட்டது என்பது தெரியாத நிலையில், கட்டிடத்தின் மாடியில் தஞ்சம் அடைந்தவர்களை ஹெலிகொப்டர்கள் மூலம் மீட்புக்குழுவினர் மீட்டனர்.
வெடிவிபத்தைத் தொடர்ந்து அந்தக் கட்டிடம் வலுவிழந்திருக்கலாம் என்னும் அச்சம் உருவாகியுள்ளதால், அதில் வசித்தவர்கள் தற்போது தற்காலிக தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
பொலிசார் இந்த வெடிவிபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan