Paristamil Navigation Paristamil advert login

உலகக் கோப்பை போட்டியில் இருந்து வெளியேறிய இலங்கை அணி

உலகக் கோப்பை போட்டியில் இருந்து வெளியேறிய இலங்கை அணி

14 ஆனி 2024 வெள்ளி 08:12 | பார்வைகள் : 8379


2024 ஆம் ஆண்டிற்கான உலகக் கிண்ணப்போட்டித் தொடரிலிருந்து இலங்கை அணி வெளியேற்றப்பட்டுள்ளது.

முதல் சுற்றுப் போட்டியில் பங்களாதேஷ் அணி நெதர்லாந்து அணியை 25 ஓட்டங்களினால் வீழ்த்தியது.

குறித்த போட்டியில் பங்களாதேஷ் வெற்றிப் பெற்றதனால் இலங்கை அணி அடுத்த சுற்றுக்கு செல்லும வாய்ப்பினை இழந்துள்ளது.

எவ்வாறெனினும் எதிர்வரும் 17ம் திகதி இலங்கை அணி நெதர்லாந்து அணியுடன் மற்றுமோரு முதல் சுற்றுப் போட்டியில் போட்டியிட உள்ளது.

இந்த போட்டியில் முடிவு எதுவாக வந்தாலும் இலங்கை அணியால அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் இலங்கை அணி உலகக் கோப்பை தொடர்களில் மின மோசமாக விளையாடி வருவதால் பல தரப்பினர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்