டொரன்டோவில் பயங்கர கத்திக்குத்து தாக்குதல்

13 ஆனி 2024 வியாழன் 10:12 | பார்வைகள் : 8656
டொரன்டோவின் பஸ் ஒன்றில் கத்திக்குத்து தாக்குதலில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ரீ.ரீ.சீ போக்குவரத்து சேவையின் பஸ் ஒன்றில் இவ்வாறு கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
பெரி மற்றும் பார்க் லொவன் வீதிகளுக்கு அருகாமையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பஸ்ஸில் இரண்டு ஆண்களுக்கு இடையில் வாக்கு வாதம் ஏற்பட்டதாகவும் பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் கத்தியால் குத்திக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மோதிக் கொண்டவர்கள் ஒருவருக்கு ஒருவர் தெரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1