Argenteuil : குழு மோதலில் இரு சிறுவர்கள் காயம்!
7 வைகாசி 2024 செவ்வாய் 16:47 | பார்வைகள் : 18817
நேற்று மே 6 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை Argenteuil (Val-d'Oise) நகரில் இடம்பெற்ற குழு மோதல் ஒன்றில் 15 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.
மாலை 7 மணி அளவில், 20 வரையான இளைஞர்கள் இணைந்து ஒருவரை ஒருவர் தாக்கி, மோதலில் ஈடுபட்டனர். பேஸ்போல் மட்டைகள், இரும்பு கம்பிகள் போன்றவற்றினால் ஒருவரை ஒருவர் தாக்கி மோதிக்கொண்டுள்ளனர்.
அதன் முடிவில், 15 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளனர்.
அவர்களில் 17 வயதுடைய சிறுவன் படுகாயமடைந்துள்ளதாகவும், பரிசில் உள்ள Bichat மருத்துவமனையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. Argenteuil நகர வழக்கறிஞர் அலுவலகம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan