பத்தகலோன் தாக்குதலை சித்திரக்கதையாக வரைந்த Fred Dewilde மரணம்!
7 வைகாசி 2024 செவ்வாய் 14:34 | பார்வைகள் : 15757
பத்தகலோன் பயங்கரவாத தாக்குதலில் உயிர் தப்பிய Fred Dewilde எனும் ஓவியர், உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். பத்தகலோன் தாக்குதலினை சித்திரக்கதையாக வரைந்து, பெரும் விற்பனை சாதனை ஒன்றை நிகழ்த்தியிருந்தார்.
2015 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் திகதி பத்தகலோன் அரங்கில் இசை நிகழ்ச்சி ஒன்று இடம்பெற்றிருந்தது. அதன்போது பயங்கரவாதிகள் மூவர் துப்பாக்கியால் சுட்டு பயங்கரவாத தாக்குதல் மேற்கொண்டிருந்தனர். அதில் உயிர் தப்பிய Fred Dewilde என்ம் ஓவியர், பின்நாட்களில் 'Mon Bataclan' எனும் சித்திரக்கதை (Comics) ஒன்றை வெளியிட்டார்.
இந்த சித்திரக்கதை பத்தகலோன் அரங்கில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பாகவும், அதில் இருந்து அவர் தப்பித்தமை தொடர்பாகவும் உருவாக்கியிருந்தார்.
இந்நிலையில், அவர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் அறிவித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan