ஆவுஸ்திரேலியாவில் 16 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்டுகொன்ற பொலிஸார்...!
5 வைகாசி 2024 ஞாயிறு 11:21 | பார்வைகள் : 7469
ஆவுஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை பொலிஸார் துப்பாக்கியால் சுட்டுகொன்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஆஸ்திரேலியாவின் பெர்த்தின் புறநகர் பகுதியான வில்லெட்டனில் 16 வயது சிறுவன் ஒருவன் பொதுமக்கள் மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
இது தொடர்பில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸாரை நோக்கி குறித்த சிறுவன் கத்தியுடன் வந்துள்ளான்.
அவனை கத்தியைக் கீழே போடுமாறும், சரண் அடையும்படியும் பொலிஸார் தெரிவித்தனர்.
இருப்பினும் அதற்கு மறுத்த சிறுவன் தொடர்ந்து தாக்குதல் நடத்த முயன்றதால் அவனை பொலிஸார் சுட்டுள்ளனர்.
பின்னர் குறித்த சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan