புற்றுநோய்க்கு உணவின் மூலமே தீர்வு. உங்கள் தட்டில் உள்ள உணவே நோயின் தாக்கத்தை நிர்வகிக்கிறது. Magazine de la Santé
5 வைகாசி 2024 ஞாயிறு 07:06 | பார்வைகள் : 9124
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 2000 நோயாளிகளிடம் அமெரிக்காவின் 'San Francisco' பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வின் முடிவை பிரான்சில் இருந்து வெளிவரும் 'Magazine de la Santé' நேற்றுமுன்தினம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து 'franc info' வானொலியில் பேசிய பிரான்ஸ் புற்றுநோய் தடுப்பு மருத்துவ பிரிவின் பேராசிரியர்
Géraldine Zamansky. இந்த ஆய்வின் முடிவினை பிரான்சும் கடைப்பிடிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.
மேற்குறிப்பிட்ட ஆய்வானது புற்று நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் சைவ, அசைவ உணவை உண்பவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டது. இதில் அசைவ உணவை உண்பவர்களின் புற்றுநோய் செல்கள் மேலும் விரிவடைந்து செல்வதையும், சைவ உணவை உண்பவர்களின் புற்றுநோய் செல்கள் 47% சதவீதம் விரிவடையாமல் இருப்பதையும் கண்டறிந்தனர்.
பிரான்ஸ் புற்றுநோய் தடுப்பு மருத்துவ பிரிவின் பேராசிரியர்
Géraldine Zamansky இது குறித்து பேசும்போது, "ஆறரை ஆண்டுகள் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றும், இது ஒரு சிறந்த வழிமுறை" என்று கூறினார், மேலும் அவர் குறிப்பிடுகையில் "நாள் ஒன்றுக்கு எட்டு வகையான மரக்கறி வகைகள், பழங்களை உண்பது மிகச்சிறந்த வழியாக அமையும் என்றும், மாமிச உணவை தவிர்க்க முடியாதவர்கள் நாள் ஒன்றுக்கு கூடியது 85 g மாமிசம் 25 cl பால் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan