Aulnay-sous-Bois : நடுவீதியில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி!
2 வைகாசி 2024 வியாழன் 07:59 | பார்வைகள் : 13832
மே 1 ஆம் திகதி நேற்று நள்ளிரவு Aulnay-sous-Bois (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
நள்ளிரவு 1.10 மணி அளவில் Jupiter Square சதுக்கத்துக்கு அருகே நின்றிருந்த ஒருவரை ஆயுததாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். 33 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், அவரது சடலத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
SAMU மருத்துவக்குழுவினர் அவரை உயிர்ப்பிக்க முயற்சி செய்தும் அது பலனளிக்கவில்லை. கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆயுததாரி வருகை தந்த மகிழுந்து தீயிட்டு எரிக்கப்பட்டிருந்த நிலையில், சம்பவ இடத்தில் இருந்து 300 மீற்றர் தொலைவில் rue Abraham Duquesne வீதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan