RER B : தொடருந்துக்குள் வைத்து கத்திக்குத்து தாக்குதல்! - ஒருவர் படுகாயம்!!
1 வைகாசி 2024 புதன் 06:01 | பார்வைகள் : 11672
RER B தொடருந்துக்குள் வைத்து ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டுள்ளார். தாக்குதலாளி உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 29 ஆம் திகதி, திங்கட்கிழமை மாலை 5.30 மணி அளவில் இச்சம்பவம் Le Bourget (Seine-Saint-Denis) நிலையத்தில் வைத்து இடம்பெற்றுள்ளது. தொடருந்தில் பயணித்த 30 வயதுடைய ஒருவரை, ஆயுததாரி ஒருவர் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். கைகளில், தொடையில், முதுகில் என குத்தப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.
அதையடுத்து, அவர் உயிருக்காபத்தான. நிலையில் Pitié-Salpêtrière மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல் மேற்கொண்டவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்டபோது, குறித்த தொடருந்து நிலையத்துக்கு அருகே வைத்து கைது செய்யப்பட்டார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan