அஜித்துக்கு விலை உயர்ந்த பிறந்தநாள் பரிசு கொடுத்த ஷாலினி!
1 வைகாசி 2024 புதன் 04:45 | பார்வைகள் : 6352
ஆசை நாயகன், காதல் மன்னன், அல்டிமேட் ஸ்டார், தல என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் அஜித். இவர் இன்று தன்னுடைய 53வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்த பிறந்தநாளுக்கு அஜித்தின் மனைவி ஷாலினி அஜித்துக்கு விலை உயர்ந்த பைக் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார்.அஜித்துக்கு விலை உயர்ந்த பைக்கை கிப்ட்டாக கொடுத்த ஷாலினி!
நடிகர் அஜித், ஷாலினி இருவரும் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள். இவர்கள் இருவரும் இணைந்து அமர்க்களம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தனர். அந்த சமயத்தில் தான் இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதன் பின்னர் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட அஜித், ஷாலினிக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள்.அஜித்துக்கு விலை உயர்ந்த பைக்கை கிப்ட்டாக கொடுத்த ஷாலினி!இந்நிலையில் நடிகர் அஜித் தனது பிறந்த நாளை கொண்டாடி கொண்டாடி வருகிறார். அஜித்துக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் நடிகை ஷாலினி அஜித்துக்கு ரூ.30 லட்சம் மதிப்புடைய டுகாட்டி பைக் ஒன்றை அஜித் பிறந்தநாள் கிப்டாக கொடுத்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் துணிவு படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக குட் பேட் அக்லி திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
25 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan