A13 : சுங்கவரி கட்டணத்தில் 50% சதவீதத்தை அரசு செலுத்தும்!!
1 வைகாசி 2024 புதன் 07:00 | பார்வைகள் : 9936
A13 நெடுஞ்சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளதை அடுத்து, A14 நெடுஞ்சாலையை பயன்படுத்தும் 'ஒரு சிலருக்கு' அவர்களுக்கான சுங்கவரிக் கட்டணத்தில் பாதியை அரசு செலுத்தும் என அறிவித்துள்ளது.
'கார்பூலிங்' (covoitureurs) என அழைக்கப்படும், சாலையில் பயணிப்பவர்கள் தங்களது மகிழுந்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும்போது, அவர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது. சுங்கவரிக் கட்டணத்தில் 50% சதவீதம் வழங்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் Patrice Vergriete, நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதி அறிவித்தார்.
மகிழுந்து ஒன்றில் இருவருக்கு மேல் பயணிக்கும் போது அவர்களுக்கு இந்த கொடுப்பனவு கணக்கிடப்படும் எனவும், A13 நெடுஞ்சாலை திறக்கபடும் வரை இந்த கொடுப்பனவுகள் கணக்கிடப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை, BlaBlaCar, Karos மற்றும் Ynstant ஆகிய மூன்று தளங்கள் ஊடாக தங்களது சக பயணிகளை தேர்ந்தெடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan