பிரபல நடிகையுடன் ஜெய்க்கு திடீர் திருமணமா?
30 சித்திரை 2024 செவ்வாய் 14:57 | பார்வைகள் : 6139
நடிகர் ஜெய் திடீரென தனக்கு திருமணமான புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அவர் திருமணம் செய்து கொண்டது பிரபல நடிகை என்று கூறப்பட்டு வருகிறது.
தமிழ் திரையுலகில் இளைய தலைமுறை நடிகரான ஜெய், விஜய் நடித்த ‘பகவதி’ என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆகிய அதன் பின்னர் ’சென்னை 600028’ ’சுப்ரமணியபுரம்’ ’சரோஜா’ ’வாமனன்’ ’கோவா’ ’எங்கேயும் எப்போதும்’ ’வடகறி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு கூட அவர் மூன்று படங்களில் நடித்தார் என்பதும் தற்போது அவர் ’கருப்பர் நகரம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஜெய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென நடிகை பிரக்யா நக்ராவுடன் திருமணம் செய்த புகைப்படத்தை பதிவு செய்து, அந்த பதிவில் ’புதிய வாழ்க்கை ஆரம்பம் கடவுள் ஆசியுடன்’ என்று தெரிவித்துள்ளார். நடிகை பிரக்யா, ‘வரலாறு முக்கியம்’ ‘என்4’உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.
ஜெய் பதிவு செய்த இந்த திருமண புகைப்படத்தில் மணமக்கள் இருவரும் தங்கள் கையில் பாஸ்போர்ட் மற்றும் விசாவுடன் இருப்பதை பார்க்கும்போது இருவரும் ஹனிமூனுக்கு வெளிநாடு போகிறார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது
ஆனால் இது ஒரு விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் பின்பக்கம் உள்ள கண்ணாடியில் கேமரா நன்றாக தெரிகிறது என்றும் ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர். இதே போல் தான் கடந்த சில நாட்களுக்கு முன்னால் பாலாஜி முருகதாஸ் திருமண புகைப்படத்தை வெளியிட்ட நிலையில் மறுநாள் தான் அது ஒரு விளம்பர படத்திற்கான போட்டோஷூட் என்பது தெரிய வந்தது. அதேபோல் இந்த புகைப்படம் குறித்து நாளை செய்தி வரலாம்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan