Paristamil Navigation Paristamil advert login

பரிசில் மற்றுமொரு தீ விபத்து! - ஒருவர் பலி!

பரிசில் மற்றுமொரு தீ விபத்து! - ஒருவர் பலி!

30 சித்திரை 2024 செவ்வாய் 14:54 | பார்வைகள் : 18835


பரிஸ் இரண்டாம் வட்டாரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் பலியான சம்பவம் அறிந்ததே. இந்நிலையில், பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் ஏற்பட்ட மற்றுமொரு தீவிபத்தில் மேலும் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 

15 ஆம் வட்டாரத்தில் உள்ள ஏழு அடுக்கு கட்டிடம் ஒன்றின் இரண்டாவது தளத்தில் அதிகாலை 2.30 மணி அளவில் தீ பரவியது. மிக வேகமாக பரவிய தீயினால் 60 வயதுடைய ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் இருவர் காயமடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

குறித்த கட்டிடத்தில் இருந்து 20 பேர் வெளியேற்றப்பட்டனர். 

முன்னதாக அதே இரவில் பரிஸ் 2 ஆம் வட்டாரத்தில் உள்ள கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீயினால் மூவர் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.